ஐரோப்பிய ஒன்றியம் பொருளடக்கம் வரலாறு புவியியல் உறுப்பு நாடுகள் சனத்தொகை ஐக்கிய இராச்சியம் வெளியேறல் மேலும் பார்க்க மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் வழிசெலுத்தல் பட்டிSymbols of the EUஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்புகுரோவாசியா 28-வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது"Mont Blanc shrinks by 45 cm (17.72 in) in two years"European CountriesEuropeans and Their Languages, 2012 ReportEuropeans and their LanguagesEuropeans and their LanguagesCouncil Regulation (EC) No 1791/2006 of 20 November 2006Languages in Europe – Official EU LanguagesSpecial Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)Many tongues, one family. Languages in the European Unionவாக்களிப்பு முடிவும் அது குறித்த கருத்துகளும்பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?அதிகாரப்பூர்வ ஐ.ஓ வலைத்தளம்ஐரோப்பா வரைபடங்கள்பத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் உரைகள்ஐ.ஓ சட்டம் மற்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்ட மாதிரிசீனா குறித்த ஐ.ஓ கொள்கைசி.ஐ.ஏ உலகத் தகவல் புத்தகப்பக்கம்ஐரோப்பிய பிரமுகர்கள் பிரிட்டன் மக்களுக்கு அனுப்பிய கடிதம்தொதொதொதொ
இராபர்ட்டு லெப்கோவிட்சுஐக்கிய அமெரிக்காபிறியன் கோபில்காஐக்கிய அமெரிக்காஐரோப்பிய ஒன்றியம்சான் பி. குர்தோன்ஐக்கிய இராச்சியம்சின்யா யாமானாக்காசப்பான்அர்கெந்தீனாஆத்திரேலியாபிரேசில்கனடாசீனாஐரோப்பிய ஒன்றியம்பிரான்சுஜெர்மனிஇந்தியாஇந்தோனேசியாஇத்தாலியப்பான்மெக்சிக்கோஉருசியாசவூதி அரேபியாதென்னாப்பிரிக்காதென் கொரியாதுருக்கிஐக்கிய இராச்சியம்அமெரிக்க ஐக்கிய நாடு
Explicitly cited English வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்ஜி-20 நாடுகள்ஐரோப்பிய ஒன்றியம்அனைத்துலக அமைப்புகள்பன்னாட்டுப் பெருநாடுகள்
28 உறுப்பு நாடுகளைக்மாசுடிரிச் ஒப்பந்தம்1950கள்வணிகக் கொள்கைவேளாண்மைமீன்பிடிக்பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும்யூரோநாணயஉலக வணிக அமைப்புஜி8ஐக்கிய நாடுகள் அவைநாட்டோசெஞ்சென் ஒப்பந்தத்தின்கடவுச்சீட்டுக்ஐரோப்பிய ஆணையம்ஐரோப்பிய நாடாளுமன்றம்ஐரோப்பிய ஒன்றிய அவைஐரோப்பிய அவைஐரோப்பிய நீதிமன்றம்ஐரோப்பிய மத்திய வங்கிஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம்ரோம் ஒப்பந்தம்அமைதிக்கான நோபல் பரிசுகுரோவாசியாபெல்ஜியம்பிரான்ஸ்இத்தாலிலக்சம்பர்க்நெதர்லாந்துமேற்கு செருமனிஐரோப்பியப் பொருளியல் சமூகம்ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம்டென்மார்க்அயர்லாந்துஐக்கிய இராச்சியம்நோர்வேயும்போர்த்துக்கல்கிரேக்கம்எசுப்பானியாசெஞ்சென் ஒப்பந்தம்ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம்கோப்பன்ஹேகன் கட்டளைவிதிஆஸ்திரியாசுவீடன்பின்லாந்துநாணயம்ஐரோ வலயம்மால்ட்டாசைப்பிரஸ்சுலோவீனியாஎஸ்தோனியாலத்வியாலித்துவேனியாபோலந்துசெக் குடியரசுசிலோவாக்கியாஹங்கேரிருமேனியாவும்பல்கேரியாவும்லிஸ்பன் ஒப்பந்தத்தில்ஐரோப்பிய அரசியலமைப்புக்குப்மோண்ட் பிளாங்க்கடல்மட்டத்திற்கு மேல்மசிடோனியக் குடியரசுதுருக்கிஅல்பேனியாபொசுனியா எர்செகோவினாமொண்டெனேகுரோசெர்பியாகொசோவோவையும்பல்கேரிய மொழிகுரோவாசிய மொழிசெக் மொழிடேனிய மொழிடச்சு மொழிஆங்கிலம்எசுத்தோனிய மொழிபின்னிய மொழிபிரான்சிய மொழிஇடாய்ச்சு மொழிகிரேக்கம் (மொழி)அங்கேரிய மொழிஇத்தாலிய மொழிஐரிய மொழிஇலத்துவிய மொழிஇலித்துவானிய மொழிமால்திய மொழிபோலிய மொழிபோர்த்துக்கேய மொழிஉருமானிய மொழிசுலோவாக்கிய மொழிசுலோவேனிய மொழிஎசுப்பானியம்சுவீடிய மொழிஇடாய்ச்சு மொழியுராலிய மொழிக்குடும்பத்தைஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தைஇந்திய-ஐரோப்பியமொழிக்குடும்பத்தைசிரில்லிக் எழுத்துக்கள்டேவிட் கேமரன்
ஐரோப்பிய ஒன்றியம்
Jump to navigation
Jump to search
ஐரோப்பிய ஒன்றியம் Европейски съюз (பல்கேரியம்) Evropská unie (செக் மொழி) | ||||
---|---|---|---|---|
| ||||
குறிக்கோள்: In varietate concordia (இலத்தீன்) "United in diversity"[1] | ||||
நாட்டுப்பண்: ஐரோப்பிய வணக்கம் (orchestral) | ||||
அரசியல் மையங்கள் | பிரஸ்ஸல்ஸ் ஸ்திராஸ்பூர்க் லக்சம்பேர்க் | |||
ஆட்சி மொழிகள் | 23 பல்கேரியம் செக் மொழி டனியம் டச்சு ஆங்கிலம் எசுத்தோனியம் பினியம் பிரெஞ்சு ஜெர்மன் மொழி கிரேக்கம் அங்கேரியம் அயரியம் இத்தாலியம் இலாத்வியம் இலித்துவேனியம் மால்ட்டியம் போலியம் போர்த்துக்கேயம் உரோமேனியம் சிலோவேக்கியம் சுலோவீனியம் எசுப்பானியம் சுவீடியம் | |||
மக்கள் | ஐரோப்பியர் | |||
உறுப்பு நாடுகள் | 28 அவுஸ்திரியா பெல்ஜியம் பல்கேரியா சைப்ரஸ் செக் குடியரசு டென்மார்க் எசுத்தோனியா பின்லாந்து பிரான்ஸ் யேர்மனி கிரேக்கம் அங்கேரி அயர்லாந்து இத்தாலி லத்வியா லித்துவேனியா லக்சம்பேர்க் மால்ட்டா நெதர்லாந்து போலந்து போர்த்துக்கல் ருமேனியா சிலவாக்கியா சிலவேனியா எசுப்பானியா சுவீடன் ஐக்கிய இராச்சியம் | |||
அரசாங்கம் | Sui generis | |||
• | ஆணையம் | José Manuel Barroso | ||
• | பாராளுமன்றம் | Hans-Gert Pöttering | ||
• | Council | சுலோவீனியா | ||
• | European Council | Janez Janša | ||
அமைப்பு | ||||
• | 1951 பரிஸ் ஒப்பந்தம் | ஏப்ரல் 18 1951 | ||
• | 1957 உரோம் ஒப்பந்தம் | மார்ச் 25 1957 | ||
• | 1992 மாசுடிரிச் ஒப்பநதம் | பெப்ரவரி 7 1992 | ||
பரப்பு | ||||
• | மொத்தம் | 43,81,376 கிமீ2 (7வது¹) 16,69,807 சதுர மைல் | ||
• | நீர் (%) | 3.08 | ||
மக்கள் தொகை | ||||
• | 2008 கணக்கெடுப்பு | 497,198,740 (3வது¹) | ||
• | அடர்த்தி | 114/km2 (69வது¹) 289/sq mi | ||
மொ.உ.உ (கொஆச) | 2007 (IMF) கணக்கெடுப்பு | |||
• | மொத்தம் | $14,953 டிரில்லியன் (1வது¹) | ||
• | தலைவிகிதம் | $28,213 (14வது¹) | ||
மொ.உ.உ (பெயரளவு) | 2007 (IMF) கணக்கெடுப்பு | |||
• | மொத்தம் | $16,574 டிரில்லியன் (1வது¹) | ||
• | தலைவிகிதம் | $33,482 (13வது¹) | ||
நாணயம் | 13 ஐரோ (€) (EUR) (சட்டப்படி)British pound பல்கேரிய லெவ் செக் கொருனா டானிய குரோன் எஸ்தோனிய குரூன் அங்கேரிய போரிண்ட் லாத்வியன் லாட்ஸ் லித்துவேனிய லித்தாசு ஸ்வாட்டெ ரொமேனிய லியு Slovak koruna சுவீடிய குரோனா | |||
நேர வலயம் | (ஒ.அ.நே+0 to +2) | |||
• | கோடை (ப.சே) | (ஒ.அ.நே+1 to +3) | ||
இணையக் குறி | .eu |
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.
2012ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]
2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது.[3]
பொருளடக்கம்
1 வரலாறு
2 புவியியல்
3 உறுப்பு நாடுகள்
3.1 மொழிகள்
4 சனத்தொகை
5 ஐக்கிய இராச்சியம் வெளியேறல்
6 மேலும் பார்க்க
7 மேற்கோள்கள்
8 வெளி இணைப்புக்கள்
வரலாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன.
1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.
1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.
போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.
1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஐரோ வலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.
2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
புவியியல்
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 4,423,147 சதுர கிலோமீட்டர்கள் (1,707,787 sq mi) பரப்பளவை கொண்டன.[lower-alpha 1] ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய மலைச் சிகரம் அல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள மோண்ட் பிளாங்க் ஆகும். 4,810.45 மீட்டர்கள் (15,782 ft) கடல்மட்டத்திற்கு மேல்.[4]
உறுப்பு நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது.[5] இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை. 28 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு 43,81,376 ச.கி.மீ. ஆகும்.
மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.